நூல் அரங்கம்

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.

ப.திருமலை

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ். - ப.திருமலை ; பக்.272; ரூ.200; சோக்கோ அறக்கட்டளை, மதுரை-20; )0452 - 2580636.
புகழ்பெற்ற வி.ஆர்.
கிருஷ்ணய்யரின் தம்பியான வி.ஆர்.லட்சுமிநாராயணன் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நூல் அவருடைய வாழ்க்கை வரலாறு. 
பணியின்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதும், மனிதாபிமானத்தை விட்டுக் கொடுக்காமல், அவர் எடுத்த முடிவுகள் வியக்க வைக்கின்றன. 
1954 இல் மதுரை - சமயநல்லூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை மக்கள் தாக்க, ஒரு கொள்ளையர் கொல்லப்படுகிறார். அப்போது அது குறித்து அறிக்கை அளித்த வி.ஆர்.லட்சுமிநாராயணன், "தற்காப்புக்காக கொள்ளைக்காரனைக் கொன்றிருக்கிறார்கள். இதைத் தவறெனச் சொல்வதற்கில்லை' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அவர் காவல்துறையில் அதிகாரியில்லை. வெறும் பயிற்சி பெறுபவர். உயர் அதிகாரிகளை அந்த அறிக்கை அதிர்ச்சியடையச் செய்தாலும், வி.ஆர்.லட்சுமிநாராயணன் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 
முதுகுளத்தூர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1957இல் நிலவிய பதற்றமான சூழ்நிலையில் பிரதமர் நேரு தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பு, மதுரை காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த வி.ஆர்.லட்சுமிநாராயணனுக்கு. நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட சிலர் அனுமதி கோரினர். பிற அதிகாரிகள் தயங்கியபோது, கறுப்பு கொடி காட்ட அனுமதித்த லட்சுமிநாராயணன் அதை முறைப்படுத்தவும் செய்திருக்கிறார். இதைப் போன்ற பல சம்பவங்கள் இந்நூல் முழுக்க நம்மை வியக்க வைக்கின்றன. 
டி.ஜி.பி.யாக அவர் இருந்தபோது, காவல்துறையில் லஞ்ச, ஊழலை அகற்றவும், காவலர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் முனைந்து செயல்பட்டிருக்கிறார். 
சமூகப் பொறுப்புள்ள ஓர் காவல்துறை உயர் அதிகாரியின் - மனிதரின் வாழ்க்கை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT