நூல் அரங்கம்

மஞ்சள் பிசாசு - தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு

அ.வி.அனிக்கின்

மஞ்சள் பிசாசு - தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு - அ.வி.அனிக்கின்; தமிழில்: நா.தர்மராஜன்; பக்.328; ரூ.270; அடையாளம், புத்தாநத்தம்; )04332 -273 444.
ரஷ்யமொழியில் 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலின் மொழிபெயர்ப்பு இந்நூல். 1980 - 1982 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. அப்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக, மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்தது, உலக அளவில் உற்பத்தியும், தொழில் முதலீடும் குறைந்தது தங்கத்தின் விலை குறைய இதுவே காரணமாகியது.
வெறும் உலோகம் என்ற நிலையைத் தாண்டி, உலக முழுவதும் உள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு நிலைகளுக்கேற்ப தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை இந்நூல் தெளிவாக ஆராய்கிறது.
தங்கம் என்ற உலோகத்தின் தன்மை, அது தோண்டியெடுக்கப்படுவது, ஆபரணத் தங்கம், தங்கக் கலைப் பொருட்கள் உருவானவிதம், அதன் தொடர்ச்சியாக நடந்த தங்கக் கடத்தல்கள், கொள்ளைகள், தங்க நாணயங்கள் தோன்றிய பிறகு தங்கம் நேரடியான பணமாக இருந்தது, காகிதப் பணம் வந்த பின்பு அது மறைமுகப் பணமாக மாறிபோனது என தங்கத்தைப் பற்றிய எல்லாவற்றையும் இந்நூல் மிக விரிவாக எடுத்துச் சொல்கிறது. வருங்காலத்திலும் "தங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற கூறுகளில் பணவீக்கமும், சமூக - அரசியல் நெருக்கடிகளும் விசேஷமான பாத்திரத்தை வகிக்கின்றன. இவை தங்கப் பதுக்கலை, முதலீட்டை, வர்த்தகச் சூதாட்டத் தேவையைத் தூண்டுகின்றன. அதைப் பயன்படுத்தக் கூடிய விசேஷமான, வேகமாக வளர்ச்சியடையக் கூடிய துறையைத் தோற்றுவிக்கின்றன. இந்தக் கூறுகளின் முக்கியத்துவமும் சக்தியும் குறையும் என்று நம்புவதற்குக் காரணமில்லை' என்று நூலாசிரியர் கூறுகிறார். இது முற்றிலும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT