நூல் அரங்கம்

ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் பசி

DIN

ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் பசி - பட்டுக்கோட்டை ராஜா; பக்.376; ரூ.333; சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை - 17; )044 - 2434 2771.
 ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் இம்மண்ணில் பிறக்கிறார்கள். ஆனால், அவர்களில் வெகு சிலர் மட்டுமே தங்களது அடையாளத்தை அழியாத் தடமாக இங்கு பதித்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களே சாதனையாளர்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள்.
 அத்தகைய வெற்றியாளர்கள் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதருக்கு தனியிடம் உண்டு.
 அவரைப் பற்றிய சரிதங்களும், வாழ்க்கை நிகழ்வுகளும் பல்வேறு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அதன் நீட்சியாக இப்புத்தகத்தை நூலாசிரியர் படைத்திருக்கிறார்.
 பொதுவாகவே, சரிதங்களை கால வரிசையில், சம்பவங்களின் தொகுப்பாகவே படித்த வாசகர்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ஏனென்றால், திரைக்கதைக்கு ஈடான விறுவிறுப்புடன் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
 வெறும் வெற்றிக் கதையாக மட்டுமல்லாமல், உலகமே உச்சி முகரும் ஒரு சாதனையாளனின் உள்ளப் புழுக்கங்களையும், வலிகளையும் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. எண்ணற்ற இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். காட்சிகளை விளக்கும் ஓவியங்களும், புகைப்படங்களும் அனைத்து பக்கங்களிலும் இடம்பெற்றிருப்பது சுவாரஸ்யத்தைத் தருகிறது. இதனால், புத்தகத்தைப் படிக்கும்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கைக்குள் பயணிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT