நூல் அரங்கம்

தீபாவளி மலர் 2018: ஆனந்தவிகடன் - பக்.400; ரூ.150.

DIN

அமரர் சில்பி வரைந்த மயிலாப்பூர் கற்பகாம்பாள் ஓவியத்தை அட்டைப்படமாகக் கொண்டு வெளிவந்துள்ளது, இவ்வாண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர். 
திரைப்படத்துறையைச் சார்ந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பலருடைய நேர்காணல்கள், தமிழச்சி தங்கபாண்டியன், நாஞ்சில்நாடன், சு.வெங்கடேசன் போன்ற இலக்கியவாதிகளின் நேர்காணல்கள், மகுடேசுவரன், கண்மணி குணசேகரன், யுகபாரதி, சக்திஜோதி ஆகியோரின் கவிதைகள், சோ.தர்மன், அ.வெண்ணிலா, சுபா, எம்.கோபாலகிருஷ்ணன் போன்றோரின் சிறுகதைகள் மற்றும் ஆன்மிகம், வரலாறு, பயணம் என எல்லாம் கலந்த தஞ்சாவூர்க் கதம்பமாக மணக்கிறது மலர். 
நேர்காணல்களில் ஐம்பொன் சிலை வடிக்கும் சிற்பி மோகன்ராஜ் ஸ்தபதி, கின்னஸ் சாதனையாளர் ஓவியர் ராஜசேகரன், "இஸ்ரோ' தலைவர் சிவன், "கடம்' விநாயகராம் ஆகியோருடையவை குறிப்பிடத்தக்கன. அகத்திய முனிவர் குறித்து அ.கா.பெருமாள் எழுதியிருக்கும் கட்டுரை மிகவும் முக்கியம்.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டையொட்டி ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்கியிருக்கலாம். 
இம்மலரில் குறிப்பிடப்படவேண்டிய ஒரு கட்டுரை, இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பின்போது உடனிருந்து உதவும் மொழிபெயர்ப்பாளர்கள் குறித்த கட்டுரையே. மிகவும் சிறப்பு.
எல்லா வயதினரையும் கவரும்படி அமைந்திருக்கிறது இவ்வாண்டின் "ஆனந்தவிகடன்' தீபாவளி மலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT