நூல் அரங்கம்

தீபாவளி மலர் 2018: சிவஒளி - பக்.178; ரூ.150.

DIN

கங்கையின் புனிதம் பற்றிய கட்டுரையில் தொடங்கி, தொடர்ந்து காசி திருத்தலத்தின் சிறப்பு, தாராசுரம், திருக்கடவூர், திருபுவனம், திருவலிதாயம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களின் சிறப்புகளும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கும் போஜ்பூர் போஜேஷ்வர் மந்திர் குறித்த கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
 "சேக்கிழார் அடிப்பொடி' தி.ந.இராமச்சந்திரன் எழுதியுள்ள "திருவாசக மொழிபெயர்ப்பு வரலாறு' , அதுபோன்றே இரா.சுப்பராயலு எழுதியுள்ள "செவ்வியல் இலக்கியக் காலங்களில் சமயப் பொறை' போன்றகட்டுரைகள் கருத்தைக் கவர்வன.
 இசைப்பிரியர்கள் விரும்பும்விதமாக, தஞ்சையை ஆண்ட சகஜி எனும் சாகேந்திரன் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் "ஆலயமும் இசை வழிபாடும்' கட்டுரையில் அமைந்துள்ளன. ஆயினும் தெலுங்கு மொழியிலுள்ள அப்பாடல்களின் பொருளை தமிழில் தராததால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
 "தாயுமானவர் தருகிற திறவுகோல்' கட்டுரை, காரைக்காலம்மையார் குறித்து எழுதப்பட்டுள்ள "பேய்க்கோலத்தான்' கட்டுரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "திருக்கோயில் வழிபாட்டு முறை' கட்டுரை அனைவருக்கும் பயன்தரக் கூடியது.
 கவிதைகள் மலரோடு பொருந்தவில்லை.
 அச்சுப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT