நூல் அரங்கம்

இன்பியல் துன்பியல் இதழியல்

கோ.சீனிவாசன்

இன்பியல் துன்பியல் இதழியல்  - கோ.சீனிவாசன்; பக்.158; ரூ.125; அகரம், தஞ்சாவூர்-7  ;   04362 - 239289.
முன்னணி ஆங்கில நாளிதழ்களில்  பணியாற்றிய நூலாசிரியர்,  செய்தி சேகரிப்பு சார்ந்த நிகழ்வுகளில் தனக்கு நேர்ந்த இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். கூடவே இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் அது குறித்த தனது அனுபவம் சார்ந்த கருத்துகளையும் கூறியிருக்கிறார். 
1990 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தை செய்தி சேகரிக்கச் சென்றபோது நேரில் பார்க்க நேர்கிறது. அந்த காட்சிகள் அவரை நினைவிலும் கனவிலும் வருத்துகின்றன. "பத்திரிகையாளர்கள் மிகப் பெரிய செய்தியைக் கொடுத்து பிரபலமாவதற்கு அவர்கள் தெய்வாதீனமாக, அதிர்ஷ்டவசமாக, இல்லையென்றால் இயற்கையாக அந்த நிகழ்வுகள் நடக்கின்ற இடத்தில் இருப்பது சாதகமானது' என்று அது குறித்துக் கூறுகிறார். 
1998 தஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேகம் செய்த போது யாகசாலையில்  தீ விபத்து நடந்தது.   அதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வதந்தி பரவியது. "வதந்திகளை எப்படித் தடுப்பது, மறுப்பது, உண்மையைக் கூட  நம்ப மறுக்கிற, பொய் என்ற நம்புகிற மக்கள் மனநிலை இருக்கும் வரை, வதந்திகளைத் தடுப்பது சுலபமா என்ன?' என்று அது தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். 
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ,  நடிகர் சிவாஜி கணேசன்,  அரசியல் தலைவர் வைகோ,  சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என பல ஆளுமைகள் பற்றிய தகவல்கள்,  தஞ்சை மாவட்ட கோயில்களைப் பற்றிய பதிவுகள் என இதழாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பயன்படும் நூலாக இந்நூல் மிளிர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT