நூல் அரங்கம்

சர்வதேச தினங்கள்

இளங்கோ

சர்வதேச தினங்கள் - ஏற்காடு இளங்கோ; பக்.388; ரூ.300;  யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ்,  8, ஆறாவது குறுக்குத் தெரு,  8  ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயல்,  சென்னை-109.

உலகமயமாகி வரும் இந்நாளில்  உலக அளவிலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சில  உள்ளூர் அளவில் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் அதேசமயம்,  அவற்றுக்கு எதிர்ப்பும் கூட  எழுகிறது.  உதாரணம்,  உலக காதலர் தினம்.  இந்நூல்  நமக்கு ஏற்கெனவே அறிமுகமான உலக  தொழிலாளர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம்,  முட்டாள்கள் தினம், உலக புத்தக தினம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைத் தருகிறது. 

அதுமட்டுமல்லாமல்  இதுவரை பலரும்  கேள்விப்படாத  உலக ஈரநிலங்கள் தினம்,  சர்வதேச மலைதினம், உலகத் தொலைக்காட்சி தினம்,  ஓசோன் படலம் பாதுகாப்பு தினம், உலக அகதிகள் தினம்  உலகக் கண்பார்வை தினம்,  உலக கழிப்பறை தினம்   என  உலக அளவில் கொண்டாடப்படும் பல தினங்களைப் பற்றிய  தகவல்களையும் தருகிறது.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உலக தினங்கள் எப்போது கொண்டாடப்படுகின்றன என்ற தகவலுடன் நின்றுவிடாமல், அவை தொடர்பான விவரங்களைக் கட்டுரை வடிவில் இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. 

உதாரணமாக ஹிரோசிமா - நாகசாகி தினம் பற்றிய கட்டுரை, இரண்டாம் உலகப் போரின்போது  1945 - இல் ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளைப் பற்றியும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றியும் சொல்கிறது. இம்மாதிரி போர்களில் ஈடுபடுவதை நிறுத்திவிடவும் ஆலோசனை சொல்கிறது. உலக அளவில் கொண்டாடப்படும்  தினங்கள் பற்றிய தகவல்களுடன் அவை பற்றிய தெளிவான பார்வையையும் இந்நூல் வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT