நூல் அரங்கம்

உடல் அரசியல்

DIN

உடல் அரசியல் - ஜெகாதா; பக்.232; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1; )0452- 2345 971.
 உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த "உடல் அரசியல்' நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை - உடலின் மொழியை - நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. "நான்' என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது.
 நமது உடலில் உள்ள உறுப்புகள்-அவை செயல்படும்விதம், ஹார்மோன்கள்- அவற்றின் பணிகள், சிறுநீரகத்தின் செயல்கள், இனப்பெருக்கம் என மனித உடலின் இயக்கத்தையும், அந்த இயக்கம் சீராக நடைபெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
 6 மணி நேரம் தூங்குவதா? 8 மணி நேரம் தூங்குவதா என்று தூங்கும் நேரத்தை வரையறுப்பதை விட உடலின் தேவைக்கு ஏற்ப தூங்குவதே நல்லது என்கிறார் நூலாசிரியர்.
 உடம்பில் சுரப்புநீர்கள் சரியாகச் சுரக்காவிட்டால் என்ன செய்வது? உடல் எடையைக் குறைப்பதால் மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள் எவை? உடல் நலனுக்காக செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் எவை? பாலுறவு விஷயத்தில் சரியான கருத்துகள் எவை? கண்களை, சிறுநீரகங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? உடலின் கழிவுத் தொழிற்சாலையான சிறுநீரகம் சரியாகச் செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பல உடல் நலம் சார்ந்த விஷயங்களை மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT