நூல் அரங்கம்

வெற்றி உங்கள் கையில் - கீழாம்பூர்

தினமணி

வெற்றி உங்கள் கையில் - கீழாம்பூர் ; பக்.88; ரூ.75;  கலைமகள் பப்ளிகேஷன்ஸ், சென்னை-4; 044- 2498 1699.

நூலாசிரியர்    பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார்.  16 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூலில் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் தேவையான பல அரிய கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.   

வாழ்க்கையில் முன்னேற எந்த ஒரு மனிதருக்கும் லட்சியங்கள் இலக்காக இருக்க வேண்டும்.  அந்த இலக்கை அடைய  உழைப்பு மிக அவசியம்.  எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.  பிற மனிதர்களுடன் பழகும்போது  ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க,   பிறருடனான தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருக்க வேண்டும்.  பிறருடன் பேசுவது மட்டுமல்ல, உடல் மொழியும் கூட தகவல் பரிமாற்றம்தான்.  வாழ்வில் பல சந்தர்ப்பங்களில்   சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.  "நான்' என்கிற தலைக்கனத்தைக் கழற்றி வைக்க வேண்டியிருக்கும். நமது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனிநபர் முன்னேற்றத்திற்காக வழிகாட்டும் நூலாசிரியர், தொழில்துறை முன்னேறுவதற்கு எவை தேவை என்பதையும் விளக்கியிருக்கிறார்.  ஆழ்ந்த பொருளுள்ள பல விஷயங்கள்,  மிகவும் எளிமையாக, சுருக்கமாக, தெளிவாக  இந்நூலில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT