நூல் அரங்கம்

வெற்றி என் கைகளிலே

DIN

வெற்றி என் கைகளிலே - ஹெரால்ட் ரஸ்ஸல்; தமிழில்: அப்துற்-றஹீம்; பக்.128; ரூ.100; யுனிவர்ஸல்பப்ளிஷர்ஸ்,சென்னை-17;) 044-2834 3385.
 ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான ஹெரால்ட் ரஸ்ஸல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய கதையை தன்வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதினார். 1954-இல் அப்துற்-றஹீம் வெளியிட்ட அதன் தமிழாக்கம் 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
 தனது கைகளை இழந்தஹெரால்ட் ரஸ்ஸல் அதற்காகத் தளர்ந்துவிடாமல், தனது மனதை எவ்வாறு பக்குவப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறினார் என்பதை இந்த நூல் விளக்குகிறது.
 "தனக்கு ஏற்படும் தடைகள், தோல்விகள், குறைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும்; இல்லையேல் மடிந்தொழிய வேண்டும் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர வேண்டியது இன்றியமையாததாகும். மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது. ஆனால் அதற்கு எளிதான பொன்மொழி ஒன்று உள்ளது. அது என்னவென்றால், "நீ இழந்து விட்டது முக்கியமானதன்று; உன்னிடம் எஞ்சியுள்ளதுதான் முக்கியமானது' என்பதுதான்'.
 ஹெரால்ட் ரஸ்ஸலின் இந்த வார்த்தைகள் இழந்ததைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் வெற்றிக்கான அடுத்த அடியை தைரியமாக எடுத்து வைக்க வலியுறுத்துகிறது.
 இந்த நூல் துயரமான நேரங்களில் நமது மனதைக் கவ்வும் எதிர்மறையான சிந்தனைகளைத் துரத்தி, இலக்கை நோக்கி நடைபோட உதவும் ஒரு படிக்கல்லாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT