தினம் ஒரு தேவாரம்

55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்

நீர் பரந்த நிமிர் புன்சடையின் மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திருமணஞ்சேரியார்
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே
 

விளக்கம்

ஏர் = அழகு. உரகம் = பாம்பு. இலங்கு = விளங்கும்.

பொழிப்புரை

செம்பட்டை நிறத்தில் காணப்படும் தனது சடையில் கங்கை நீரைத் தேக்கியவராக உள்ள பெருமான், சடையின் மேல் ஊரெங்கும் ஊர்ந்து திரியும் பாம்பினை அணிந்துள்ளார். அவர் பல சிறப்புகள் வாய்ந்த திருமணஞ்சேரி தலத்தில் உறைகின்றார். அவர் தனது கையினில் அழகிய சூலத்தை ஏந்தியவராய் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT