தினம் ஒரு தேவாரம்

85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 6:

    சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
           சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
    பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
           புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
    அங்கமலத்து அயனோடு மாலும் காணா
           அனல் உருவா நின் பாதம் போற்றி போற்றி
    செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
           திருமூலட்டானனே போற்றி போற்றி

விளக்கம்:

சங்கரன்=நலம் அளிப்பவன்; சதாசிவன்=அருவுருவ, இலிங்கத் திருமேனியாக இருப்பவன். இந்த பாடல் முழுவதும் இறைவனின் திருப்பாதங்களைப் போற்றுவதாக அமைந்துள்ளது. 

பொழிப்புரை:

எல்லோர்க்கும் நலத்தினை அளிப்பவனே, அருவுருவ இலிங்க வடிவாக இருப்பவனே, படம் எடுக்கும் பாம்பினை அணியாக அணிந்தவனே, புண்ணியத்தின் வடிவாக உள்ளவனே, அழகிய தாமரை மலரில் உறையும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண முடியாதவாறு தழல் உருவாக எழுந்தவனே, உனது திருப்பாதங்களை போற்றுகின்றேன், தாமரை மலர் போன்று மென்மையான உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன். திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT