Specials

பொங்கல் சாம்பார்

DIN

தேவையானவை:
பாசிப்பருப்பு - 2 கையளவு
பீன்ஸ்- 10 
கேர்ட் - 1
காளிப்ளவர் - சில பூக்கள்
பச்சை மிளகாய்- 2
மிளகாய்த் தூள்- 1/4 தேக்கரண்டி
தனியாத் தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
வெங்காயம் - 1 
தக்காளி - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், பீன்ஸ்,கேரட், காளிப்ளவர் பூக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உப்பு சேர்த்து, தண்ணிர் ஊற்றி வேக வைக்கவும்.

காய்கள் வெந்ததும் பாசிப்பருப்பை அதனுடன் கலந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

- ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT