முகப்பு
விளையாட்டு

இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி

சென்னை, ஜன.5: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பெர்டிச் 6-

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:01 PM
பகிர்:

சென்னை, ஜன.5: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பெர்டிச் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 86-வது இடத்தில் உள்ள குரேஷியாவின் இவான் டோடிக்கை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 6-3, 7-6 (3) என்ற செட்களில் பெல்ஜியத்தின் மார்கஸ் டேனியல்- ஆர்ஜென்டீனாவின் எட்வர்டோ ஸ்வாங்க் ஜோடியை வென்று காலிறுதிக்குத் தகுதிபெற்றது.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

 பிரதான மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், குரேஷியாவின் இவான் டோடிக்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டின் முதல் பந்திலேயே இவான் டோடிக்கின் சர்வீûஸ முறியடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் பெர்டிச். அடுத்த இரு கேம்களையும் சிறப்பாக விளையாடி தன்வசமாக்கிய பெர்டிச், 4-வது கேமை டோடிக்கிடம் இழந்தார். இதை கடுமையாகப் போராடியே டோடிக் வென்றார். பெர்டிச் தொடர்ந்து நெட்டில் அடித்ததும் 4-வது கேமை இழந்ததற்கு மற்றொரு காரணம். பின்னர் அடுத்த இரு கேம்களையும் வென்ற பெர்டிச், 7-வது கேமில் சறுக்கலைச் சந்தித்தார். இந்த கேமின்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் பெர்டிச். இருப்பினும் அடுத்த கேமை வென்று 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார் பெர்டிச்.

தொடர்ந்து 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை வென்று ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் பெர்டிச்.

போபண்ணா-குரேஷி ஜோடி வெற்றி: இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- பாகிஸ்தானின் குரேஷி ஜோடியும், பிரேசிலின் மார்கஸ் டேனியல்-ஆர்ஜென்டீனாவின் எட்வர்டோ ஸ்வாங்க் ஜோடியும் சந்தித்தன.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய போபண்ணா ஜோடி முதல் செட்டின் நான்காவது கேமின்போது மார்கஸ் டேனியல் ஜோடியின் சர்வீûஸ எளிதாக முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த கேமின்போது போபண்ணாவின் அதிரடியான சர்வீûஸ தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது மார்கஸ் ஜோடி. பந்தை தூக்கியடித்தும் மார்கஸ் ஜோடி தவறு செய்தது. அடுத்த இரு சுற்றுகளையும் வென்ற போபண்ணா ஜோடி 9-வது கேமை வென்றதன் மூலம் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை 28 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் இரு ஜோடிகளும் தங்களது சர்வீஸில் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இந்த செட்டின் 3-வது கேமில் கிடைத்த வாய்ப்பை போபண்ணா ஜோடி வீணடித்தது. இந்த செட்டின் முடிவில் இரு ஜோடிகளும் சமநிலை பெற்றன.

இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய போபண்ணா ஜோடி 7-3 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் 6-3, 7-6 (3) என்ற கணக்கில் வெற்றிபெற்ற போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதிபெற்றது. மகேஷ் பூபதி-பயஸ் ஜோடி ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் மைதானத்தில் கிரிக்கெட்

போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் போபண்ண-குரேஷி ஜோடி, தாங்கள் விளையாடிய டென்னிஸ் பந்துகளில் கையெழுத்திட்டு பின்னர் அதை கிரிக்கெட் பேட்டால் ரசிகர்களை நோக்கி அடித்தனர். மைதானத்தின் பல்வேறு திசைகளில் சென்று விழுந்த பந்துகளை அங்கிருந்த ரசிகர்கள் போட்டி போட்டு எடுத்ததோடு, உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மற்ற ஆட்டங்கள்

மற்ற இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் தாய்லாந்தின் சஞ்சாய் ரதிவதனா ஜோடி 7-6 (7), 6-1 என்ற கணக்கில் பிரிட்டனின் காலின் ஃப்ளம்மிங்-ராஸ் ஹட்சின்ஸ் ஜோடியை வீழ்த்தியது. இதேபோல் அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி-ராஜீவ்ராம் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் டஸ்டின் பிரெüன்- நெதர்லாந்தின் ரோஜர் வாùஸன் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றது.

பிளாஸ் கேவிக் வெற்றி

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்லோவேகியாவின் பிளாஸ் கேவிக் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ராபர்ட் கென்ரிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.