விளையாட்டு

ஐடிஎஃப் டென்னிஸ்: ஸ்ரீராம் பாலாஜி தோல்வி

கோவையில் நடைபெறும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த என்.ஸ்ரீராம் பாலாஜி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆர். வேல்முருகன்

கோவையில் நடைபெறும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த என்.ஸ்ரீராம் பாலாஜி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கோவை புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமியும், கோவை மாவட்ட டென்னிஸ் சங்கமும் இணைந்து ஐடிஎஃப் டென்னிஸ் போட்டிகளை நடத்துகின்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள உள்ள ஜீவன் நெடுஞ்செழியன் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கருண்டே சிங்கை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள என்.ஸ்ரீராம் பாலாஜி, 3-வது இடத்தில் உள்ள விஜயானந்த் மாலிக் ஆகியோர் மோதினர்.

முதல் செட்டில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இருவரும் அவரவர் சர்வீசில் கேம்களை வென்றனர்.

முதல் செட்டில் 5-5 என்ற கேம் கணக்கில் இருந்தபோது, ஸ்ரீ ராம் பாலாஜியின் சர்வீசை முறியடித்தார் விஜயானந்த் மாலிக். அடுத்த கேமை வென்று 7-5 என்ற கணக்கில் விஜயானந்த் மாலிக் முதல் செட்டை கைப்பற்றினார்.

அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு விஜயானந்த் மாலிக் தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

நேரடி ஒளிபரப்பு: ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. இப்போட்டி தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இரட்டையர் இறுதிப் போட்டி: போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் கெய்த் பேட்ரிக் கிரெளலி, இந்தியாவின் அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் பாரிக் முகமது, விக்னேஷ் பெரணமல்லூர் ஜோடியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஜோடிக்கு சுமார் ரூ. 35 ஆயிரம் ரொக்கமும், தோல்வியடைந்த ஜோடிக்கு சுமார் ரூ. 18 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT