8 கேட்சுகள் பிடித்து ரஹானே உலக சாதனை! (வீடியோ)
இதற்கு முன்பு 5 வீரர்கள் டெஸ்ட் மேட்சில் 7 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் இருந்தார்கள்.
இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே உலக சாதனை செய்துள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் 2-வது இன்னிங்ஸில் (73-வது ஓவரில்) ஹெராத்தின் கேட்ச்சை ரஹானே பிடித்தபோது ஓர் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில், இதுவரை கீப்பர் அல்லாத எந்த ஒரு ஃபீல்டரும் 8 கேட்சுகளைப் பிடித்ததில்லை. ஹெராத்தின் கேட்சைப் பிடித்ததன் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரஹானே. இதற்கு முன்பு 5 வீரர்கள் டெஸ்ட் மேட்சில் 7 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் இருந்தார்கள். அந்தச் சாதனையை ரஹானே முறியடித்துள்ளார்.
8 கேட்சுகள் வீடியோ
Advertisement
</p>