முகப்பு
விளையாட்டு

ரியோ ஒலிம்பிக்: மல்யுத்த போட்டிக்கு இந்திய நடுவர் தேர்வு

ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டிக்கான நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Updated On : 26 டிசம்பர், 2015 at 7:20 PM
பகிர்:

அடுத்த ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டிக்கான நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய நடுவர் ஒருவர் மல்யுத்த போட்டியின் நடுவராகப் பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பணியாற்றுவதற்காக நடுவர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 50 பேரை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது. லாஸ் வேகாஸ் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக மூத்த மல்யுத்த வாகையர்  World Senior Wrestling Championship) போட்டியில் பணியாற்றியதன் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

ஆசிய கண்டத்திலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நடுவர் அசோக் குமார் மட்டுமே.

இந்திய விமானப் படையில் பணியாற்றி வரும் அசோக் குமார் இதுவரை 50க்கும் அதிகமான சர்வதேச போட்டித் தொடர்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.