விளையாட்டு

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை!

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகிய இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் 6-ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

மேலும், குருநாத் மெய்யப்பனின் மாமனார் என்.சீனிவாசன் பிசிசிஐ அமைப்பில் எந்தவிதமான பதவியையும் வகிக்கக் கூடாது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியை இழந்தார்.

லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறப்பட்டதாவது:

குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரியாகச் செயல்பட்டார். அவர் அதிகமுறை பெட்டிங்கில் ஈடுபட்டார். இந்திய சட்டப்படி சூதாட்டம் மிகப்பெரிய குற்றம்.

குந்த்ரா மீது சூதாட்டப் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சூதாட்டத் தரகர் மூலமாக குந்த்ரா அடிக்கடி பெட்டிங் செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் (குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா) பெட்டிங்கில் ஈடுபட்டதன் மூலம் விளையாட்டின் மாண்பை குறைத்துவிட்டார்கள். வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.

ஐபிஎல் நடவடிக்கைகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக மகளிா் கொண்டு செல்ல வலியுறுத்தல்!

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை

பாஜக மூலம் அமமுக தொகுதி உடன்படிக்கை: டிடிவி தினகரன்

அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT