கொல்கத்தாவில் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி: பிசிசிஐ அறிவிப்பு
இதற்கான போட்டிகள் பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹலி, மும்பை, நாக்பூர், டெல்லி, கொல்கத்தா ஆகிய 8 இடங்களில் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும்
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
2016 மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டிகள் பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹலி, மும்பை, நாக்பூர், டெல்லி, கொல்கத்தா ஆகிய 8 இடங்களில் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.