முகப்பு
விளையாட்டு

பிசிசிஐயில் சச்சின், கங்குலிக்கு புதிய பொறுப்புகள்!

மூன்று வீரர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Updated On : 1 ஜூன், 2015 at 5:38 PM
பகிர்:

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகிய முன்னாள் வீரர்களுக்குப் புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இத்தகவலை பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று பேரும் இந்திய கிரிக்கெட் தொடர்பான முக்கியமான முடிவுகளுக்கு கலந்தாலோசிக்கப்படுவார்கள். ஆலோசனைக் குழுவில் ராகுல் டிராவிடை இணைக்கவும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் மறுத்துவிட்டதால் வாய்ப்பு லட்சுமணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.