ஜிம்பாப்வே தொடர்: ரஹானே கேப்டன்!
தோனி, கோலி, ரெய்னா, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வேவில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி, கோலி, ரெய்னா, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி: ரஹானே (கேப்டன்), விஜய், ராயுடு, மனோஜ் திவாரி, ஜாதவ், உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஹர்பஜன், அக்ஷர், கர்ன் சர்மா, தவால் குல்கர்ணி, பின்னி, புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா.
Advertisement