விளையாட்டு

உலக இளையோர் செஸ்: இந்தியாவுக்கு 11 பதக்கம்

தினமணி

உலக இளையோர் (யூத்) செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
 கிரீஸின் போர்டோ கராஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகாலட்சுமி (மகளிர் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவு), வைஷாலி (14 வயது பிரிவு), பிரக்னானந்தா (ஆடவர் 10 வயது பிரிவு), ரக்ஷிதா ரவி (மகளிர் 10 வயது பிரிவு), பாரத் சுப்பிரமணியம் (8 வயது பிரிவு, ஓபன்) ஆகியோர் தங்கம் வென்றனர்.
 நிஹால் சரின் (12 வயது, ஓபன்), தேவ் ஷா (8 வயது, ஓபன்) வர்ஷினி (மகளிர் 18 வயது) ஆகியோர் வெள்ளியும், வந்திகா அகர்வால் (மகளிர் 14 வயது), சாய்னா சலோனிகா (மகளிர் 12 வயது), திவ்யா தேஷ்முக் (மகளிர் 10 வயது) ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.
 இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 12 பிரிவுகளில் 50 பேர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT