முகப்பு
விளையாட்டு

இந்தி பேச தெரிந்த பயிற்சியாளர் தேவை: பிசிசிஐ விளம்பரம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இந்தி உள்ளிட்ட மாநில மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும் என பிசிசிஐ விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On : 1 ஜூன், 2016 at 9:40 PM
பகிர்:

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இந்தி உள்ளிட்ட மாநில மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும் என பிசிசிஐ விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் 2015 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது. இதன்பிறகு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரவி சாஸ்திரி இயக்குநராக செயல்பட்டு வந்தார். சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரங்கள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்தி மற்றும் மாநில மொழிகளும் பேசத் தெரிந்துக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதுதவிர விளையாட்டு உளவியல், விளையாட்டு மருத்துவம் குறித்தும் தெரிந்திருப்பதோடு, ஒவ்வொரு வீரரின் திறமைகள் குறித்து தொழில்நுட்ப ரீதியாக விளக்கம் அளிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செலுத்துவதற்கு ஜூன் 10 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.