விளையாட்டு

சர்வதேச கால்ந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவில் நீதிபதி முகுல் முத்கல்

சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

PTI

புது தில்லி: சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி முகுல் முத்கல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை தடை செய்தார்.

மேலும், தில்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் கண்காணிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நியமனம் குறித்த நேரடியான கடிதம் ஏதும் தனக்கு இதுவரை வரவில்லை. எனினும், சம்மேளனத்தின் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டதாகவும், அந்த பணியை ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT