விளையாட்டு

என் அழகு மகளே வருக! - சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவின் மனைவி பிரியங்காவுக்கு நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள தனியார் மருத்துவமனையில், அந்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு குழந்தை பிறந்தது.

PTI

ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து): இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா சௌத்ரிக்கு ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெதர்லாந்து நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கிரேஸியா என பெயரிடப்பட்டுள்ளது.

``என் அழகு மகளே வருக! நீண்ட காத்திருப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக அவளுக்கு ஆடை அலங்காரம் நடைபெறுகிறது'' என டுவிட் செய்துள்ளார் ரெய்னா.

தனது அடுத்த பதிவில் குழந்தையின் படத்தையும் பதிவிட்டுள்ளார் ரெய்னா.

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். நெதர்லாந்தில் வேலை செய்து வரும் பிரியங்கா கருவுற்றார்.

ஐபிஎல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் ரெய்னா, மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக கடந்த வாரம் நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

ஐபிஎல் போட்டியில் கடந்த 8 சீசன்களில் ஓர் ஆட்டத்தைக்கூட தவறவிடாத ரெய்னா, இந்த சீசனில் முதல் முறையாக பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.

ரெய்னா கடந்த 10-ஆம் தேதி நெதர்லாந்து சென்றதால் அந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் குஜராத் அணி மெக்கல்லம் தலைமையில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT