விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணி நிதான ஆட்டம்

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோலியின் இரட்டை சதம், முரளி விஜய் சதம், சஹா சதம் அடித்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 687 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. தமிம் இக்பால் 24, மோமினுல் ஹக் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். முன்னதாக செளம்ய சர்க்கார் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை துவங்கிய வங்கதேச அணியில் தமிம் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மாமினுல் ஹக் (12), மகமதுல்லா (28) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற அந்த அணி 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தற்போது வரை  வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 எடுத்து விளையாடி வருகிறது.  ஷாகிப் (76), முஷ்பிகுர் (36) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT