விளையாட்டு

இந்தியா - ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சிறப்பு டெஸ்ட்: மோடி மகிழ்ச்சி

DIN

கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது. இதையடுத்து, அந்த அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியாக இது கருதப்படுகிறது. 

அதனால், இந்த டெஸ்ட் போட்டி குறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  

"ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. அதற்கு அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை அவர்கள் இந்தியாவுடன் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள். விளையாட்டு இருநாட்டு மக்களையும் ஒன்றிணைத்து, உறவை பலப்படுத்தட்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT