விளையாட்டு

மல்யுத்தம்: ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் 5 இந்தியர்கள் தோல்வி

DIN


அல்மேட்டி: கஜகஸ்தானில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் கிரேக்கோ ரோமன் பிரிவில் 5 இந்திய வீரர்கள் அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டனர். 

இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வீரர்களே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆடவருக்கான 87 கிலோ பிரிவில் நேரடியாக காலிறுதியில் பங்கேற்ற சுனில் குமார், 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் கிர்ஜிஸ்தானின் சுக்ரோப் அப்துல்கயேவை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். எனினும், அதில் 5-9 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் வீரர் நுர்சுல்தான் துர்சினோவிடம் தோல்வி கண்டார். 

அதேபோல், 60 கிலோ பிரிவில் ஞானேந்தர், தைபே வீரர் ஜுய் சி ஹுவாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியபோதும், அதில் கிர்ஜிஸ்தானின் ஜோலாமன் ஷர்ஷென்பெகோவிடம் 1-6 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தார். 

67 கிலோ பிரிவில் களம் கண்ட அஷு காலிறுதியில் கியே டியானை 5-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். ஆனால் அரையிறுதியில் ஈரானின் முகமத்ரெஸாஅப்துல்ஹமீத் கெரேயிடம் தோல்வி கண்டார். இதேபோல், 77 கிலோ பிரிவில் குருபிரீத் சிங்கும், 130 கிலோ பிரிவில் நவீனும் காலிறுதியில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறி அதில் தோல்வி கண்டனர். 

சுனில் குமார் உள்ளிட்ட இந்த 5 போட்டியாளர்களும் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் அடுத்து களம் காண்கின்றனர். 

மல்யுத்த விளையாட்டில் இதுவரை இந்தியாவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பஜ்ரங் புனியா (65 கிலோ), ரவி தாஹியா (57 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), வினேஷ் போகாட் (53 கிலோ) ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT