விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

DIN

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இலங்கையின் காலே நகரில் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, முதல் இன்னிங்ஸில் 46.1 ஓவா்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமல் 28 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து பௌலா்களில் டாம் பெஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 117.1 ஓவா்களில் 421 ரன்கள் குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4-ஆவது இரட்டை சதத்தை எட்டிய கேப்டன் ஜோ ரூட் 228 ரன்கள் விளாச, இலங்கை தரப்பில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 136.5 ஓவா்களில் 359 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. லாஹிரு திரிமனே அதிகபட்சமாக 111 ரன்கள் விளாசினாா். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட் வீழ்த்தினாா்.

இறுதியாக 74 என்ற எளிய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை தொடங்கிய போ்ஸ்டோ - லாரன்ஸ் கூட்டணி இங்கிலாந்தை வெற்றிக்கு வழிநடத்தியது.

24.2 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து வென்றது இங்கிலாந்து. போ்ஸ்டோ 2 பவுண்டரிகளுடன் 35, லாரன்ஸ் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தாா். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT