விளையாட்டு

நோ- காஸ்டலிங் செஸ் போட்டியில் ரஷ்ய கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்

DIN

ஜெர்மனி : செஸ் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்.  பல்வேறு உலக செஸ் போட்டிகளில் தொடர்ந்து கவனம்  செலுத்தி வருவதால்  தற்போது  ரஷ்ய கிராண்ட் மாஸ்டரால் உருவாக்கப்பட்ட " நோ- காஸ்டலிங் "( no  -castling ) முறை  செஸ்  போட்டியின் முதல் அதிகாரப்பூர்வ ஆட்டத்தில் 66 நகர்வுகளில்   ரஷ்ய கிராண்ட் மாஸ்டரானா விளாடிமிர் கிரானிக்கை வீழ்த்தியிருக்கிறார். நான்கு ஆட்டங்களைக் கொண்ட இப்போட்டியில் முதல் ஆட்டத்திலேயே தன்னுடைய வெற்றியை விஸ்வநாதன் ஆனந்த்  பதிவு செய்திருக்கிறார்.

இந்தப்  போட்டிகளின் முடிவில் வழங்கப்படும்   முதல் பரிசு 37000 அமெரிக்க டாலர் என்றும்  மொத்த  பரிசுத்தொகை 1.50 லட்சம் அமெரிக்க டாலர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு முன் விஸ்வநாதன் ஆனந்த்  கடந்த வாரம் குரோஷியா கிராண்ட்  செஸ் டூர் போட்டியில் ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் கேரி காஸ்பரோவை வென்றது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT