விளையாட்டு

ஒமிக்ரான் கரோனா பரவல்: பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒத்திவைப்பு

DIN

புதிய வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த சர்வதேச இளையோர் பெண்கள் உலககோப்பை ஹாக்கி போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் சர்வதேச இளையோர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை தற்காலிகமாக ஒத்திவைத்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி உலகக்கோப்பை போட்டி நடைபெற இருந்தது. பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களின் உடல்நலத்தை கணக்கில் கொண்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நிலைகளைக் கருத்தில் கொண்டு போட்டி தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT