கோப்புப் படம் 
விளையாட்டு

வங்கதேச கேப்டன் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு 

வங்க தேசத்தின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்து இருக்கிறார். 

DIN

வங்க தேசத்தின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்திருக்கிறார். 

தமிம் இக்பால் 2007 முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வந்தார். அந்நாட்டின் சார்பாக டி20 போட்டியில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இதுவரை அவரிடமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது அதிகபட்ச ரன்களை எடுத்த வங்கதேச அணி வீரராகவும் அவரே இருக்கிறார். 

மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது வங்கதேச கேப்டன் தமிம் இக்பாலுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிம் இக்பால் தனது முகநூல் பக்கத்தில், “இன்று முதல் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து நான் ஒய்வு பெறுகிறேன். அனைவருக்கும் நன்றி”.  

ஜனவரியில் தமிம் இக்பால் கூறியதாவது:

டி20 கிரிக்கெட்டில் என்னுடைய எதிர்காலம் பற்றி விவாதித்தோம். இந்த வருட டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் எனக்கு வேறு எண்ணம் உள்ளது.  அடுத்த ஆறு மாதங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே என் கவனம் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு என் தேவையிருக்காது என எண்ணுகிறேன். ஆனால் கடவுள் நினைத்தால், கிரிக்கெட் வாரியத்துக்கு நான் தேவைப்பட்டால் விளையாட நான் தயார். அப்போது டி20 கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி யோசிப்பேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்புப் படையில் இடஒதுக்கீடு கோரி ராகுல் குழப்பம் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல்: 50 சதவீத படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT