ஆசியாவில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரிஷப் பந்த்.
260 ரன்கள் இலக்கை கொண்டு ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். முதலில் நிதானமாகவும் பின்னா் அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 125 ரன்களை விளாசி தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். பந்த்-ஹார்திக் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்களை சோ்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த சதத்தின் மூலம் ரிஷப் பந்த் ஆசியாவிலே முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.