தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ் 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மோதி வருகின்றது. தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டர் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் சதமடித்து, தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பையின் 10வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து 19வது ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது ரூசோவ் ஆட்டமிழந்தார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார்.
20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி குவித்துள்ளது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.