கோப்புப்படம்
கோப்புப்படம் 
விளையாட்டு

சொந்த மண்ணில் கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர்!

DIN

ஆஸ்திரேலிய மண்ணில் டேவிட் வார்னர் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடினார்.

ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டி20 லீக் போட்டிகளை தவிர்த்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இன்று விளையாடியது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரில் டேவிட் வார்னர் விளையாடுவார். அதன்பின் உலகக் கோப்பை டி20 தொடரில் வார்னர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சொந்த மண்ணில் தனது கடைசிப் போட்டியில் வார்னர் இன்று (பிப்ரவரி 13) விளையாடினார்.

போட்டி நிறைவடைந்த பிறகு வார்னர் பேசியதாவது: நான் எனது கிரிக்கெட் பயணத்தை நன்றாக நிறைவு செய்துவிட்டதாக நினைக்கிறேன். அணியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட்டிலிருந்து சிறிது ஓய்வெடுப்பது என்பது நல்லது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. நான் டி20உலகக் கோப்பைத் தொடரில் விளையாட விரும்புகிறேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேசப் போட்டியிலிருந்து விடை பெறுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர.குள்ளம்பட்டி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு தோ்வு: சேலம் மத்திய சிறைக் கைதிகள் 23 போ் தோ்ச்சி

தமிழா்கள் குறித்த சா்ச்சை பேச்சைக் கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டம்

மேட்டூா் ஜிவி மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT