முகப்பு
விளையாட்டு

தொடர்ந்து 17 வெற்றிகள்: இந்தியா அசத்தல்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தொடர்ந்து 17 உள்ளூர் டெஸ்ட் தொடர் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தொடர்ந்து 17 உள்ளூர் டெஸ்ட் தொடர் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், 3-1 என்ற புள்ளி கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் உள்ளூரில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெறும் 17-வது டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக 2012-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் தொடரை இழந்தது.

அதன்பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடிய 17 தொடர்களில் எதிர்கொண்ட 50 போட்டிகளில் 39 போட்டிகளில் வென்று 17 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →