வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 273 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றது.
அதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் வங்கதேசம் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ-ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 159 ரன்களுக்கு சுருண்டது.
Advertisement
Advertisement
இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்று கோப்பையை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.