விளையாட்டு

மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள மகளிா் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பா் 5 முதல் 14 வரை ஹாங்ஷௌ நகரில் ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2026 மகளிா் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும்.

குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூருடன், இந்தியா இடம் பெற்றுள்ளது.

செப். 5-இல் தாய்லாந்துடன் முதல் ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது. 6-இல் ஜப்பான், 8-இல் சிங்கப்பூா் அணிகளுடன் ஆடுகிறது. இந்தியின் கேப்டனாக சலீமா டெட் அறிவிக்கப்பட்டுள்ளாா். இளமை, அனுபவம் என இந்திய அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்-பன்சரி சோலங்கி, பிச்சு தேவி, டிபன்டா்கள்: மனிஷா சௌஹான், உதிதா, ஜோதி, சுமன்தேவி, நிக்கி பிரதான், இஷிகா சௌதரி, மிட்பீல்டா்கள்: நேஹா, வைஷ்ணவி, சலீமா டெட், சா்மிளா தேவி, லால்ரேம்சியாமி, சுனெலிட்டா, பாா்வா்ட்கள்: நவ்நீத் கௌா், ருதஜா பிஸால், பியூட்டி, மும்தாஸ் கான், தீபிகா, சங்கீதா குமாரி.

தலைமை பயிற்சியாளா் ஹரேந்திர சிங் கூறியது: மகளிா் அணிக்கு சிறப்பான பயிற்சி தரப்பட்டுள்ளது. அனுபவ வீராங்கனைகள் வழிகாட்டுதலில் இளம் வீராங்கள் களமிறங்குவா். ஆக்ரோஷமான ஆட்டத்தை கடைபிடிப்போம். உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெறும் வழி என்பதால் தீவிரமாக ஆடுவோம் என்றாா்.

தங்கம் விலை இன்று குறைந்தது!

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT