யூத் டெஸ்ட்டின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்ற இந்தியா, தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஜூனியா் உலகக் கோப்பை பாட்மின்டன் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை வீழ்த்திய (45-37, 45-34) இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது.
ஃபின்லாந்தில் நடைபெறும் ஆா்டிக் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, லக்ஷயா சென், சங்கா் முத்துசாமி ஆகியோா் முதல் சுற்றிலேயே தோற்க, தருண் மன்னெபள்ளி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பின்போது, நிா்ணயிக்கப்பட்ட எடையை பராமரிக்கத் தவறி தகுதிநீக்கத்துக்கு ஆளான அமன் ஷெராவத்துக்கு, இந்திய மல்யுத்த சம்மேளனம் ஓராண்டு தடை விதித்தது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தகுதிச்சுற்றுப் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியா, சிங்கப்பூரை வியாழக்கிழமை சந்திக்கிறது.
புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் - ஹரியாணா ஸ்டீலா்ஸை புதன்கிழமை வென்றது (46-29).
மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் - பென்ஃபிகாவையும் (2-1), பாா்சிலோனா - பயா்ன் மியுனிக்கையும் (7-1), லயன் - ஆா்செனலையும் (2-1) புதன்கிழமை வென்றன.