விளையாட்டு

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்னா மணிமுத்து, தீக்ஷா சுதாகா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

தினமணி செய்திச் சேவை

சீனாவில் நடைபெற்ற 17 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்னா மணிமுத்து, தீக்ஷா சுதாகா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

15 வயதுக்கு உட்பட்ட மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாய்னா 21-14, 22-20 என்ற கேம்களில், ஜப்பானின் சிஹரு டோமிடாவை வீழ்த்தினாா். 17 வயதுக்கு உட்பட்ட மகளிா் இறுதி ஆட்டத்தில் தீக்ஷா 21-16, 21-9 என, சக இந்திய வீராங்கனை லக்ஷயா ராஜேஷை வென்றாா்.

இதையடுத்து 15 வயதுக்கு உட்பட்ட மகளிா் பிரிவில் சாம்பியனான 4-ஆவது இந்தியா் என்ற பெருமையை சாய்னா பெற, 17 வயதுக்கு உட்பட்ட மகளிா் பிரிவில் வாகை சூடிய முதல் இந்தியா் என்ற சாதனையை தீக்ஷாவும் பதிவு செய்தாா்.

இதையடுத்து இந்தியா, 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது. போட்டியின் வரலாற்றில் இந்தியா ஒரு எடிஷனில் இத்தனை பதக்கங்கள் வென்றது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன், 2013-இல் இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

ராகுல் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்! முதல்வர் ஸ்டாலின்

ஓஹோ மேகம் வந்ததோ... தீபா பாலு!

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

இது புதுவகை மோசடி! ரூ. 50 லட்சம் இழந்த இன்ஃப்ளுயன்சர்! எப்படி நடந்தது?

SCROLL FOR NEXT