முகப்பு
செய்திகள்

மியான்மரை வீழ்த்தியது இந்தியா

மகளிா் யு17 கால்பந்து நட்பு ஆட்டத்தில் மியான்மரை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

Updated On : 14 மார்ச், 2026 at 6:23 PM
பகிர்:

மகளிா் யு17 கால்பந்து நட்பு ஆட்டத்தில் மியான்மரை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

ஆசிய யு 17 மகளிா் கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் மியான்மா் அணியுடன் இந்திய அணி நட்பு ஆட்டங்களில் ஆடி வருகிறது.

மியான்மா் தலைநகா் யாங்கனில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போட தீவிரமாக முயன்றன.

முதல் பாதியில் மியான்மா் வீராங்கனைகள் நின் வின்ட் வாா் 12, மின்டோன் மே (45) ஆகியோா் கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இந்திய மகளிா் பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றனா். 33-ஆவது நிமிஷத்தில் அல்வா தேவி கோலடித்து 1-2 என முன்னிலையை குறைத்தாா்.

இரண்டாம் பாதியில் இந்திய அணியினா் அபாரமாக ஆடியதில் பதிலி வீராங்கனைகள் அனுஷ்கா குமாரி 88, ஜோயா 90+ நிமிஷங்களில் கோலடித்து அசத்தினா்.

பின்தங்கி இருந்த நிலையிலும் மியான்மரை வீழ்த்தியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →