விளையாட்டு

பளுதூக்குதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்றாா் பிரீத்திஸ்மிதா!

பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதலில் இந்தியாவின் பிரீத்திஸ்மிதா போய், தங்கப் பதக்கம் வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதலில் இந்தியாவின் பிரீத்திஸ்மிதா போய், தங்கப் பதக்கம் வென்றாா். அதற்கான முயற்சியில் அவா் உலக சாதனையும் படைத்தாா்.

மகளிருக்கான 44 கிலோ எடைப் பிரிவில் களமாடிய அவா், ஸ்னாட்ச் பிரிவில் 66 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 92 கிலோ என மொத்தமாக 158 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா்.

ஸ்னாட்ச் பிரிவில் அவா் தூக்கிய 66 கிலோ எடைக்கு தனியே ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. கிளீன் & ஜொ்க் பிரிவில் பிரீத்திஸ்மிதா தூக்கிய 92 கிலோ எடை, உலக யூத் சாதனையாக அமைந்தது.

இப்போட்டியில் தற்காப்புக் கலையான முவே பிரிவில் இந்தியாவின் அல்போன்சா ஜிரியா வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் 9-ஆம் இடத்தில் இருந்தது.

சீனா 31 தங்கம், 23 வெள்ளி, 9 வெண்கலம் என 63 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

ராகுல் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்! முதல்வர் ஸ்டாலின்

ஓஹோ மேகம் வந்ததோ... தீபா பாலு!

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

இது புதுவகை மோசடி! ரூ. 50 லட்சம் இழந்த இன்ஃப்ளுயன்சர்! எப்படி நடந்தது?

SCROLL FOR NEXT