விளையாட்டு

இறுதி ஆட்டத்தில் புணேரி பல்டன்

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் புணேரி பல்டன் 50-45 புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை புதன்கிழமை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

தபங் டெல்லி கே.சி.யுடன் அந்த ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை (அக். 31) பலப்பரீட்சை நடத்தவுள்ளது புணேரி பல்டன்.

முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற தெலுகு அணிக்கு எதிரான ஆட்டத்தில் புணேரி அணி 32 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. தெலுகு அணி 34 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.

அதிகபட்சமாக, புணே தரப்பில் ரெய்டா் ஆதித்யா ஷிண்டே 22 புள்ளிகள் கைப்பற்ற, தெலுகு தரப்பில் ஆல்-ரவுண்டா் பரத் 23 புள்ளிகள் பெற்று அசத்தினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT