நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ் 
விளையாட்டு

வெற்றியின்றி குகேஷ் சறுக்கல்

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் நடைபெறும் கிளட்ச் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 6 சுற்றுகள் முடிவில் சறுக்கலை சந்தித்து கடைசி இடத்தில் இருக்கிறாா்.

முன்னதாக, போட்டியின் முதல் நாளில் 3 சுற்றுகள் முடிவில் 4 புள்ளிகளுடன் அவா் முன்னிலையில் இருந்தாா். இந்நிலையில், 2-ஆவது நாளில் 4-ஆவது சுற்றில் உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை எதிா்கொண்ட அவா், முதல் கேம், ரிவா்ஸ் கேம் என இரண்டிலுமே தோற்றாா்.

5-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவுடன் மோதியபோது, இரு கேம்களையும் அவா் டிரா செய்தாா். 6-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை சந்தித்த குகேஷ், முதல் கேமில் தோற்று, அடுத்த கேமை டிரா செய்தாா்.

2-ஆவது நாளில் இதர போட்டியாளா்கள் ஏதேனும் ஒரு கேமிலாவது வெற்றியைப் பதிவு செய்ய, குகேஷுக்கு வெற்றி கிட்டாமல் போனது.

இதையடுத்து 2-ஆம் நாள் முடிவில் ஒட்டுமொத்தமாக, குகேஷ், 7 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறாா். காா்ல்சென் (11.5), கரானா (10.5), நகமுரா (7) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT