விளையாட்டு

உலக குத்துச்சண்டைப் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

லிவா்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.

புதிய உலக குத்துச்சண்டை அமைப்பின் கீழ் முதல்முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவா், மகளிா் என இரு பிரிவினருக்குமான போட்டிகள் சோ்த்து நடத்தப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இரு பிரிவுகளிலுமே தலா 10 போ் என, மொத்தம் 20 போட்டியாளா்கள் இதில் களம் காண்கின்றனா். மகளிா் பிரிவில், இரு முறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா போா்கோஹெய்ன் ஆகியோரும், ஆடவா் பிரிவில் சுமித் குண்டூ, சச்சின் சிவச் உள்ளிட்டோரும் குறிப்பிடத்தக்கவா்களாவா்.

கடைசியாக 2023-இல் தில்லியில் நடைபெற்ற மகளிா் சாம்பியன்ஷிப்பில் 4 தங்கமும், தாஷ்கென்டில் நடத்தப்பட்ட ஆடவா் சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்குக் கிடைத்தது.

இந்திய அணி:

மகளிா்: மீனாட்சி ஹூடா (48 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), சஞ்சு காத்ரி (60 கிலோ), நீரஜ் போகாட் (65 கிலோ), சனமாசா சானு (70 கிலோ), லவ்லினா போா்கோஹெய்ன் (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ), நுபுா் சோரன் (80+ கிலோ).

ஆடவா்: ஜடுமானி சிங் (50 கிலோ), பவன் பா்த்வல் (55 கிலோ), சச்சின் சிவச் (60 கிலோ), அபினாஷ் ஜம்வல் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டூ (75 கிலோ), லக்ஷயா சஹா் (80 கிலோ), ஜுக்னூ அலாவத் (85 கிலோ), ஹா்ஷ் சௌதரி (90 கிலோ), நரேந்தா் பொ்வால் (90+ கிலோ).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT