ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா படுதோல்வி!
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவிடம் இந்தியா தோல்வி!
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது.
இறுதிச்சுற்றில், இந்தியா 1 - 4 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது.
ஆட்டம் ஆரம்பமான முதல் நிமிஷத்திலேயே இந்திய வீராங்கனை நவ்நீத் கௌர் பெனால்ட்டி ஷீட் அவுட் வாய்ப்பை கோல் ஆக மாற்றி அணியை முன்னிலைப்படுத்தி சீன வீராங்கனைகளுக்கு கிலியை உண்டாக்கினார்.
Advertisement
Advertisement
எனினும், அதன்பின் சுதாரித்து ஆடிய சீன வீராங்கனைகள் ஆட்டத்தின் 21, 41, 51 மற்றும் 53-ஆவது நிமிஷங்களில் கோல் மழை பொழிந்து ஆசிய கோப்பையை தங்கள் வசமாக்கினர்.
இதன்மூலம், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.
India lose 1-4 to China in women's Asia Cup hockey final, miss out on direct World Cup berth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.