ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பதக்கப் பட்டியலைத் துவக்கியது.

18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் போட்டிகள் நடக்கின்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர் வீராங்கனைகள், அதிகாரிகள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா மற்றும் ரவி குமார் ஜோடி 429.9 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா கணக்கை தொடங்கியது.

இந்தப்போட்டியில் சீன தைபே-வைச் சேர்ந்த யின்ஷின் லின், சௌச்சௌன் லூ தங்கமும், சீனாவின் சாௌ ரௌஸோ, யாங் ஹோரன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT