இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம்: டென்னிஸ் இரட்டையர் போட்டியில் ரோஹன் போபண்ணா ஜோடி சாம்பியன்!
இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டி விஜ் சரண் இணை...
18-வது ஆசியப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கின.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டி விஜ் சரண் இணை தங்கம் வென்றுள்ளது.
கஸகஸ்தானைச் சேர்ந்த பப்லிக் - யெவ்சேவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளது இந்திய இணை.
Advertisement
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 6-வது தங்கம் இது. இந்திய அணி 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. சீனா 60 தங்கம் உள்ளிட்ட 123 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.