முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

வில்வித்தை: இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது!

கொரிய அணி 231-228 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று தங்கத்தைத் தட்டிச் சென்றது. இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் பிரிவு அரையிறுதியில் சீன தைபே அணியை 225-222 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. இந்நிலையில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தென்கொரியாவை இன்று எதிர்கொண்டது.

ஆரம்பத்தில் முன்னிலை கண்ட இந்திய அணி, பிறகு தென் கொரியாவின் ஆதிக்கத்தால் தங்கப் பதக்கத்தை இழக்க நேர்ந்தது. கொரிய அணி 231-228 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று தங்கத்தைத் தட்டிச் சென்றது. இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மதுமிதா குமாரி, முஷ்கன் கிரர், ஜோதி வென்னம் ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →