ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: இந்தியாவுக்கு 10-ஆவது தங்கத்தை வென்றார் அர்பிந்தர் சிங் 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் மும்முறை தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் மும்முறை தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மும்முறை தாண்டுதல் பிரிவு இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 

இவர், தனது 6 வாய்ப்பில் தாண்டிய தூரங்களின் விவரம்:

முதல் வாய்ப்பு: தோல்வி 

2-ஆவது வாய்ப்பு: 16.58

3-ஆவது வாய்ப்பு: 16.77

4-ஆவது வாய்ப்பு: 16.08

5-ஆவது வாய்ப்பு: தோல்வி

6-ஆவது வாய்ப்பு: தோல்வி

இதில், இவர் தனது 3-ஆவது வாய்ப்பில் தாண்டிய 16.77 மீட்டர் தூரம் வெற்றி தூரமாக அமைந்தது. இதன்மூலம், முதலிடம் பிடித்த இவர் இந்தியாவுக்கு 10-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார். 

இவருக்கு அடுத்தபடியாக முறையே உஸ்பெகிஸ்தான் வீரர் குர்பநோவ் ருஸ்லான் 16.62 மீட்டர் தூரம், காவ் ஷ்வோ 16.56 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.  இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரரான ராகேஷ் பாபு 16.40 மீட்டர் தூரம் தாண்டி 6-ஆவது இடத்தை பிடித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT